
இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு உபுல் தரங்கா - குமார் சங்கக்காரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் உபுல் தரங்கா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய லஹிரு திரிமானாவேவும் 14 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் சங்கக்காராவுடன் இணைந்த குணரத்னே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதத்தை நெருங்கிய சங்கக்காரா 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய குணரத்னே 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இலங்கை மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆஷ்லே நர்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.