
In every game, condition Bumrah has proved himself: KL Rahul (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்கள் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக ஐந்தாம் நாள் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டு, போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார்.