
விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா, அசாம் அணிகள் முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் கர்நாடகாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா - அஸாம் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அஸாம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதமடித்தார்.
காலிறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 126 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 168 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து அங்கிட் பாவ்னேவும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அங்கித் 110 ரன்களை குவித்தார். ருதுராஜ் மற்றும் அங்கித் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 350 ரன்களை குவித்தது.