
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி நெருங்கிய உறவினர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக நேற்று நடந்த மெஹந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவருக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்த நிலையில், திருமணம் வரவேற்பு குறித்து முக்கியமான தகவலையும் அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.அதாவது, வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையில் 16ஆவது ஐபிஎல் போட்டி நடக்க இருக்கிறது. இந்த சீசன் முடிந்த பிறகு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.