Advertisement

IND vs AUS: விசா பிரச்சனை முடிந்து இந்தியாவிற்கு புறப்பட்டார் உஸ்மான் கவாஜா!

விசா பிரச்சனையால் இந்தியா வருவதில் தாமதமான ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் உஸ்மான் கவாஜா விசா பிரச்சனை முடிந்து இந்தியா திரும்புகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 02, 2023 • 12:06 PM
IND V AUS: Visa Approved, Usman Khawaja On His Way To Join Teammates In Bengaluru
IND V AUS: Visa Approved, Usman Khawaja On His Way To Join Teammates In Bengaluru (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நாக்புரியில் நடைபெறுகிறது. எனினும் பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆஸ்திரேலிய அணி முடிவு செய்துள்ளது. உஸ்மான் கவாஜாவைத் தவிர ஆஸ்திரேலிய வீரர்களும் அனைவரும் நேற்று பெங்களூருக்கு வந்தார்கள். 

Trending


பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா மட்டும் விசா கிடைக்காத காரணத்தால் இந்தியாவுக்கு உடனடியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. விசாவுக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தாலும் கவாஜாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரில்லாமல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்தது. 

இந்நிலையில் கவாஜாவின் சிக்கல் தீர்ந்து, அவருக்கு விசா கிடைத்து விட்டது. இதையடுத்து சிட்னியிலிருந்து பெங்களூருக்கு இன்று வரவுள்ளார். விமானத்திலிருந்து ஒரு இன்ஸ்டகிராம் பதிவையும் கவாஜா வெளியிட்டுள்ளார். இதனால்  முதல் டெஸ்டில் தகுந்த பயிற்சியுடன் கவாஜா பங்கேற்பதில் எந்தவொரு சிக்கலும் தற்போது இல்லை. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement