மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித் சர்மா; அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, காயம் காரணமாக விலகினார். முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினால், வங்கதேச மண்ணில் தொடர்ந்து 2ஆவது முறையாக தொடரை இழந்து மோசமான சாதனையை இந்தியா படைக்கும். இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடர், டி20 உலககோப்பையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது.
Trending
இதனால், ரோகித் சர்மாவுக்கு வங்கதேச தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்துள்ளது.
இதனிடையே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற ரோஹித் சர்மா இந்திய அணியின் யுத்திகளை மாற்றினார். அக்சர் பட்டேலை அணிக்குள் கொண்டு வந்தார். பேட்டிங்கில் மீண்டும் ரன் குவிக்க நேற்று, ரோஹித் கடும் பயிற்சியில் மேற்கொண்டார். இதனால் ரோஹித் பழைய பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்று ரோஹித் சர்மா ஃபில்டிங் செய்யும் போது, முகமது சிராஜ் பந்துவீச்சில் அனாமுல் ஹக் அடித்த பந்து, ஸ்லிப்பை நோக்கி பறந்தது. அப்போது பந்தை பிடிக்க முயன்ற போது, ரோஹித் சர்மாவின் கையை பந்து பதம் பார்த்தது. இதனையடுத்து ரோஹித் சர்மா வலியால் போட்டியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு ரோஹித் சர்மா கொண்ட செல்லப்பட்டு, அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவிலேயே ரோஹித் சர்மா இந்த தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்று தெரியவரும். தற்போது ரோஹித் களத்தில் இல்லாததால், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.
Win Big, Make Your Cricket Tales Now