இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணி இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளதாக அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயண மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒல்லி போப்பின் அபாரமான ஆட்டத்தின் மூலம் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பும்ராவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இதனால் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயாயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணி அபுதாபி சென்று பயிற்சி மேற்கொண்ட நிலையில் நேற்றைய தினம் இந்தியா வந்தடைந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் ராஜ்கோட்டில் தங்களது பயிற்சியைத் தொடரவுள்ளனர்.
Trending
இந்நிலையில், ராஜ்கோட் மைதானத்தில் புற்கள் அதிகம் இருந்தால் நிச்சயம் நாங்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவோம் என் அந்த அணியின் துணைக்கேப்டன் ஒல்லி போப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மூன்றாவது போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானம் புற்களுடன் பச்சையாக இருந்தால் நிச்சயம் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
நான் எங்கள் அணியின் ரகசியங்களை உடைக்க விரும்பவில்லை. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த மைதானத்தில் புற்கள் உள்ளன. அதனால் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு நல்ல பிட்ச் போல் தோன்றுகிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் நாங்கள் சில முடிவுகளை எடுப்போம். ஏனெனில் மைதானத்தின் தன்மை மற்றும் நிலைமைகள் மாறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now