
இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார். மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.