
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். துவக்கம் முதல் இறுதி வரை அவர்களுக்கு சரியாக அமையவில்லை. 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக க்ளாஸன் 34 ரன்கள் அடித்திருந்தார். குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ், சபாஷ் அகமது மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அடுத்ததாக பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாடினார். 49 ரன்கள் அடித்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக தவறவிட்டார். அடுத்ததாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 28 ரன்கள் அடிக்க, இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்து 7 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.