
இந்திய அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. இத்தொடர் முடிந்த உடன் நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்து இலங்கைக்கு எதிரான முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடும்.
முதலில் தொடங்கும் டி20 தொடர் ஜனவரி 3, 5, 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த டி20 தொடரில் இந்திய இளம் டி20 அணிதான் விளையாட உள்ளது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், ஹார்திக் பாண்டியா டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி கொடுத்து, தனது கேப்டன்ஸியை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்.
இதனால், இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இலங்கை அணி ஆசியக் கோப்பையில் இந்தியா வீழ்த்தி கெத்து காட்டியிருந்தார்கள். இதனால், இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். இந்நிலையில், இந்த இலங்கை தொடருக்கு முன், கேப்டன் ஹார்திக் பாண்டியா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.