Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மொஹாலில் தொடங்கவுள்ளது.

Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 21, 2023 • 08:50 PM

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மாதியம் 1.30 மணிக்கு மொஹாலியில் நடைபெறுகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 21, 2023 • 08:50 PM

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஐஎஸ் பிந்த்ரா மைதானம், மொஹாலி
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி தகவல்கள்

இத்தொடரில் நடப்பு ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் முதலிரண்டு போட்டிகளில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கேஎல் ராகுல் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் குறையை போக்குவதற்காக நீண்ட நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே விராட், ரோஹித் சர்மா ஆகியோர் இல்லாமலேயே கில், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்களைக் கொண்டுள்ள இந்தியா இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றி பெறுவதற்கு போராட தயாராகியுள்ளது. மேலும் பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, முகமது ஷமி ஆகியோரும் இருப்பதும் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஆனால் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்கள் என்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இருப்பினும் டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும், ஜோஷ் ஹசில்வுட், சீன் அபேட், ஆடம் ஸாம்பா, கேமரூன் க்ரீன் ஆகியோர் பந்துவீச்சிலும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 146
  • இந்தியா - 54
  • ஆஸ்திரேலியா - 82
  • முடிவில்லை - 10

உத்தேச லெவன் 

இந்தியா: ஷுப்மான் கில், இஷான் கிஷன், திலக் வர்மா, கேஎல் ராகுல் (கே), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.  

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஷுப்மான் கில் (துணை கேப்டன்)
  • ஆல்ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ்
  • பந்துவீச்சாளர்கள்- பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports