Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது.

Advertisement
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 2ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!  (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 23, 2023 • 10:36 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 23, 2023 • 10:36 PM

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்கிற முனைப்புடனும் ஆஸ்திரேலியா அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. 

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம்- ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர் 
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம் 

முதல் இரு ஆட்டங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் இரு ஆட்டங்களும் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்,ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனெனில்காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றாலும் அசவுகரியமாக உணர்ந்ததால் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பேட்டிங்கில் களமிறங்கினார். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் அவர், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

அதேவேளையில் ஒருநாள் போட்டிகளில் மோசமான சாதனைகளை வைத்துள்ள சூர்யகுமார் யாதவ், தனது மேம்பட்ட பேட்டிங்திறனை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறார். இது ஒருபுறம் இருக்க 23 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. அக் ஷர் படேல் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விலக நேரிட்டால் அந்த இடம் அஸ்வினுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களிலும் அவர், தேர்வுக்குழுவினரின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டிய நிலையில் உள்ளார். இதே நிலைமையில்தான் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார்.

மேலும் முதல் போட்டியில் பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி கூட்டணி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு பெரும் சவாலாக உள்ளனர். அவர்களுடன் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.  

ஆஸ்திரேலிய அணியானது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரை சந்திக்கிறது. மேலும் முதல் போட்டியில் அனுபவ வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் இப்போட்டியிலும் விளையாடமாட்டர்கள் என்று அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் அந்த அணி நாளைய போட்டியில் ஜோஷ் ஹசில்வுட், தன்வீர் சங்கா ஆகியோருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோருடன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரும், பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா ஆகியோரும் இருப்பதால் நிச்சயம் அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மொத்தம் – 147
  • இந்தியா - 55
  • ஆஸ்திரேலியா - 82
  • முடிவில்லை - 10

உத்தேச லெவன்

இந்தியா: ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்ராகுல் (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், மேட் ஷார்ட், பாட் கம்மின்ஸ் (கே), சீன் அபோட், ஆடம் ஜாம்பா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, மார்கஸ் ஸ்டோனிஸ் (துணை கேப்டன்), கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள்- முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement