Advertisement

இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2023 • 22:59 PM
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! 
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!  (Image Source: CricketNmore)
Advertisement

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி  வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானம், ராஜ்கோட்
  • நேரம் - மதியம் 1.30 மணி 

போட்டி முன்னோட்டம் 

இந்திய அணி தரப்பில் முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 2ஆவது ஒரு நாள் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷுய்ப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். பின்னர் வந்த கேஎல் ராகுல் 50 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 72 ரன்களை விளாசினார். 

அதேசமயம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மேலும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, முகமது ஷமி ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடக்க உள்ள 3ஆவது ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் டேவிட் வார்னர் சிறப்பான பங்களிப்பை அமைத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக வந்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் விளையாடவுள்ளதால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு துறை வலிமையடைந்துள்ளது. இவர்களுடன் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணிக்கு இது பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மோதும் அணிகள்

  • மொத்தம் – 148
  • இந்தியா - 56
  • ஆஸ்திரேலியா - 82
  • முடிவில்லை - 10 

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ், ஸ்டீவ் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா
  • பந்துவீச்சாளர்கள்- மிட்செல் ஸ்டார்க், முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement