இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
அதேபோல், நவம்பர் 26 நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
- நேரம் - இந்திய நேரப்படி இரவு 7.00 மணி
பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை:
இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு உகந்ததாக உள்ளது. மேலும்,ஆட்டம் நடைபெறும் கௌகாத்தி மைதானத்தில் பனிப்பொழிவு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 28
- இந்தியா - 17
- ஆஸ்திரேலியா - 10
- முடிவில்லை - 01
ஒளிப்பரப்பு
ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோ சினிமா ஆப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்:
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, மற்றும் தன்வீர் சங்கா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஷ் ஆங்கிலம், இஷான் கிஷன்
- பேட்ஸ்மேன்கள்- ஸ்டீவ் ஸ்மித், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட்
- பந்துவீச்சாளர்கள்- சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரவி பிஷ்னோய்.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now