
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. ஆனால் 3வது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 2023 உலகக் கோப்பையை வென்ற எங்களுக்கு இதெல்லாம் சாதாரணம் என்பது போல் க்ளன் மேக்ஸ்வெல் அதிரடியால் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலைமையில் 4ஆவது போட்டியில் வென்று இத்தொடரை கைப்பற்ற இந்தியா தயாராகி வருகிறது. அதற்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடும் நிலையில் பவுலர்கள் கொஞ்சம் பொறுப்புடன் ரன்களை வள்ளலாக வாரி வழங்காமல் செயல்படுவது அவசியமாகிறது. மறுபுறம் மீண்டும் அதிரடியாக விளையாடி இத்தொடரையும் இந்தியா வெல்லவிடாமல் செய்வதற்கு ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. இதனால் நாளை இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 4ஆவது டி20 போட்டியின் மீதான எதிர்பாப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - சாகித் வீர் நாராயணன் சிங் கிரிக்கெட் மைதானம், ராய்ப்பூர்
- நேரம் - இந்திய நேரப்படி இரவு 7.00 மணி