இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையேயான 5ஆவது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்க்பபடுகிறது. இந்திய அணியில் 2 வீரர்களுக்கு முதல் 4 டி20-யில் வாய்ப்பு வழங்காததால் நாளைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - இரவு 7 மணி
பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை
பெங்களூரு நகரில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் வானம் வழக்கமான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பெங்களூரு மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதை அனைவருமே அறிவோம். குறிப்பாக இங்குள்ள பவுண்டர்களின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால் நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் எளிதாக பெரிய ரன்களை அடித்து நொறுக்கலாம்.
இதனால் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும் அல்லது பெரிய ஸ்கோரை சேசிங் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 30
- இந்தியா - 18
- ஆஸ்திரேலியா - 11
- முடிவில்லை - 01
ஒளிப்பரப்பு
ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோ சினிமா ஆப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்:
ஆஸ்திரேலியா: ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(கே), பென் துவார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கே), ஜிதேஷ் சர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - மேத்யூ வேட், ஜோஷ் பிலிப்
பேட்ஸ்மேன்கள்- சூர்யகுமார் யாதவ், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
ஆல்ரவுண்டர் - அக்சர் படேல், ஆரோன் ஹார்டி
பந்துவீச்சாளர்கள்- ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரவி பிஷ்னோய்
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now