இந்தியா vs ஆஸ்திரேலியா, WTC 2023 Final: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. இந்த முறை நிச்சயம் வெற்றி பெற வேண்டும் எனும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
- இடம் - ஓவல் கிரிக்கெட் மைதானம், இங்கிலாந்து
- நேரம் - மாலை 3.00 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக திகழ்கிறது. அதிலும் இந்த உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 5 கேப்டன்கள், 2 பயிற்சியாளர்கள் உடன் 6 தொடர்களில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றிகள் மற்றும் 5 போட்டிகளில் தோல்விகளை கடந்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. சொந்த மண்ணில் நடந்த அனைத்து தொடர்களையும் வென்ற இந்திய அணி, வெளிநாட்டு தொடர்களில் 1 தோல்வி மற்றும் 1 டிராவை சந்தித்துள்ளது.
அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கொலி, ஷுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் ஆகியோரும் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் முகமது ஷமி, முகமது ஷமி , ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் என நட்சத்திர வீரர்கள் இன்றி இந்திய அணி விளையாடவுள்ளது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஐசிசி தொடர்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுவரை ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோரும், பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் ஆகியோரும் இருப்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மொத்தம் - 106
- இந்தியா - 32
- ஆஸ்திரேலியா -44
- டிரா - 29
- முடிவில்லை - 01
உத்தேச லெவன்
இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கே), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - அலெக்ஸ் கேரி
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷுப்மான் கில்
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, கேமரூன் கிரீன்
- பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க் (கேப்டன்), முகமது ஷமி (துணை கேப்டன்), பாட் கம்மின்ஸ், முகமது சிராஜ்
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now