Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 24, 2024 • 11:27 AM

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் மீதமிருக்கும் இரு இடங்களுக்கான போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் நீடித்து வருகின்றன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 24, 2024 • 11:27 AM

இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய நிலையிலும், இந்திய அணி கணிசமான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவாமல் இருக்க வேண்டிய நிலையிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் இப்போட்டியின் ஃபேண்டஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Trending

இந்திய அணி

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல், சூப்பர் 8 சுற்றிலும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் +2.42 என்ற ரன்ரேட்டிலும் உள்ள இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் அரையிறுதிச்சுற்றுக்கு நேரடியாக முன்னேறும். ஒருவேளை இப்போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவினால் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடனே வெளியேறும் அபாயமும்ம் உள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா அணி 41 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆஃப்கானிஸ்தான் அணி 83 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றால் இந்தியா அணியின் உலகக்கோப்பை கனவானது மீண்டும் தகரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரையில் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ரன்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பலம் சேர்க்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. 

இந்தியாவின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி

மிட்செல் மார்ஷ் தலைமையிலான் ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை இன்றைய போட்டியில் இந்தியாவை கட்டாயம் தோற்கடித்து வெற்றிபெற வேண்டும். அதே சமயம் ஆஃப்கானிஸ்தானை, வங்கதேச அணி வீழ்த்த வேண்டும். இவ்வாறு நடந்தால் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் தலா 4 புள்ளிகளுடன் அரைஇறுதியை எட்டும். ரன்ரேட் பிரச்சினை எழாது. ஆனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, கடைசி லீக்கில் ஆஃப்கானிஸ்தானும் வாகை சூடினால் அப்போது இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கும்.

அப்படி நடிக்கும் எனில் ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். எனவே ஆஸ்திரேலிய அணியானது ரன்ரேட்டை மனதில் வைத்து விளையாட வேண்டியா கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியின் தூண்களாக உள்ளனர். அதேசமயம் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். 

அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோருடன், அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய பாட் கம்மின்ஸும் இருப்பது அணிக்கு நம்பிக்கையளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது என நம்பப்படுகிறது. 

ஆஸ்திரேலிய உத்தேச லெவன்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

AUS vs IND T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், டிராவிஸ் ஹெட்
  • ஆல்ரவுண்டர் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement