சாம்பியன்ஸ் கோப்பை 2025: வங்கதேசம் vs இந்தியா - உத்தேச லெவன்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
2-mdl.jpg)
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இன்ற் நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
Trending
இந்திய அணி
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தடுமாறிய ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒருநாள் போட்டித் தொடரில் ஃபார்முக்கு திரும்பிவுள்ளனர். அவர்களுடன் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மேற்கொண்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது கூடுதல் பலம். பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ரானாவும் அணிக்கு வலு சேர்க்கின்றனர். இருப்பினும் பும்ரா இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
வங்கதேச அணி
நஸ்முல் ஹாசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இல்லை. எனினும் அந்த அணி ஐசிசி தொடர்களில் முன்னணி அணிகளுக்கு பலமுறை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சியளிக்க கடினமாக உழைக்கும். அணியின் பேட்டிங்கில் சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், மஹ்முதுல்லா, ஜக்கார் அலி, முஷ்ஃபிக்கூர், தாவ்ஹித் ஹிரிடோர் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோருடன் இளம் வீரர்களான நாஹித் ரானா, பர்வேஸ் ஹொசைன், நசும் அஹ்மத், தன்ஸிம் ஹசன் ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு அது பெரும் சாதகமாக அமையும். மேற்கொண்டு ஐசிசி தொடர்களில் இவ்விரு அணிகளுக்கும்ம் இடையேயான போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
வங்கதேச உத்தேச லெவன்: சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், ஜாகர் அலி, தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ரியாத், மெஹதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஷ்பிகுர் ரஹீம்.
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷுப்மான் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மஹ்முதுல்லா ரியாத், ஹார்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ்
- பந்து வீச்சாளர் - முகமது ஷமி, தஸ்கின் அஹ்மத்
Win Big, Make Your Cricket Tales Now