
இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடந்துவருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்பதால் வெற்றி முனைப்புடன் களமிறங்கியுள்ளது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் நிதானத்தை காட்ட முயற்சித்தாலும் தவறான ஸ்வீப் ஷாட் அடித்து 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் வழக்கம் போல தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதனால் 48/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை மறுபுறம் நின்ற சட்டேஸ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக விளையாடி 4ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து அவுட்டனர்.