இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் நடைபெறவுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்குகிறது. அதன்படி இன்று குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நடைபெறவுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பதால் இதில் எந்த அணி வெற்றிவாகை சூடும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Trending
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இளம் வீரர்கள் மயங்க் யாதவ், ஹர்ஷித் ரானா மற்றும் நித்தீஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுடன் வருண் சக்ரவர்த்தியும் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். மேற்கொண்டு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடவுள்ளனர்.
இவர்களுடன் ஹர்திக் பாண்டியா, ரியான் பாராக், ரிங்கு சிங் உள்ளிட்ட அதிரடி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங்கும் இருப்பது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் காயம் காரணமாக ஷிவம் துபே அணியில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கான மாற்று வீரராக திலக் வர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் திலக் வர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், திலக் வர்மா, ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்/வருண் சக்ரவர்த்தி, மயங்க் யாதவ்.
வங்கதேச அணி
நஹ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியானது, நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் இல்லாமல் களமிறங்குகிறது. டெஸ்ட் தொடரின் போதே அவர், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக மெஹிதி ஹசன் மிராஸ்14 மாதங்களுக்கு பிறகு வங்கதேச டி20 அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
அதற்கேற்றவகையில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், தாவ்ஹித் ஹிர்டோய், மஹ்முதுல்லா, முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், மெஹிதி ஹசன் என நட்சத்திர வீரர்களுடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணிக்கு எதிராக இதுநாள் வரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதெச அணி சோபிக்கவில்லை என்றாலும், நிச்சயம் சாவாலை கொடுக்கும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனம் எழுந்துள்ளது.
வங்கதேசம் உத்தேச லெவன்: லிட்டன் தாஸ், தன்ஸித் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), தௌஹீத் ஹிர்டோய், மெஹ்தி ஹசன் மிராஸ், மஹ்முதுல்லா ரியாத், ரிஷாத் ஹுசைன், மெஹ்தி ஹசன், தன்சிம் ஹசன் ரஹ்மத், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
Also Read: Funding To Save Test Cricket
IND vs BAN 1st T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன், லிட்டன் தாஸ்
- பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, அபிஷேக் சர்மா (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரியான் பராக், ரிஷாத் உசேன், மெஹ்தி ஹசன் மிராஸ்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், அர்ஷ்தீப் சிங்
Win Big, Make Your Cricket Tales Now