அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்; போல்டாக்கி வழியனுப்பிய பும்ரா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்ஸர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் 3ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 87 ரன் எடுத்த நிலையில் ரூட் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறவ், இறுதியில் இந்திய அணி 121 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
Trending
இதன் மூலம் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து 190 ரன்கள் பின்னிலையுடன் இராண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கும் பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி 31 ரன்களில் ஆடமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் அதிரடி காட்டிய பென் டக்கெட் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட்டும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் , ஜஸ்ப்ரித் பும்ராவின் அடுத்த ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Jasprit Bumrah is the greatest ever in the Modern Era.
— Johns. (@CricCrazyJohns) January 27, 2024
- The monster.pic.twitter.com/c3Fj9n5mvv
இந்நிலையில் இப்போட்டியின் இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா க்ளீன் போல்ட் மூலம் கைப்பற்றினார். அதன்படி பும்ராவின் ரிவர்ஸ் ஸ்விங்கை கணிக்க தவறிய டக்கெட் அந்த பந்தை அடிக்க முயன்று தோல்வியடைந்தார். ஆனால் பந்து நேர ஸ்டப்புகளை தாக்கியதுடன், அதனை தூர வீசியது. அந்த விக்கெட்டை கைப்பற்றியபின் ஜஸ்ப்ரித் பும்ரா ஆக்ரோஷமாக கத்தி பென் டக்கெட்டை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் அக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now