ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இப்போட்டிகான இந்திய அணியில் ராஜத் பட்டிதாரும், இங்கிலாந்து அணியில் சோயப் பஷீரும் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களைச் சேர்த்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 179 ரன்களைச் சேர்த்து இரட்டை சத்தை நெருங்கிவருகிறார். அதேசமயம் மற்ற எந்தவொரு பேட்டர்களும் 50 ரன்களைக் கூட தாண்டவில்லை.
Trending
அதிலும் குறிப்பாக் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அறிமுக வீரர் சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ரன்களை அடிக்கும் எண்ணத்திலேயே இல்லாததுபோல் இருந்தது. பிட்ச்சில் நாம் எந்தவிதமான டர்னிங், பவுன்ஸ் எதையும் பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் பொறுமையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா தான் தனது வழக்கமான ஆட்டத்தை விடுத்து பொறுமையாக செயல்பட்டார். ஏனெனில் ஒரு பிளாட்டான விக்கெட்டில் அவர் பின்தங்கியிருந்தார்.
அதிலும் குறிப்பாக அவர் ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்பமுடியவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவுட்டாகலாம், ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கேள்வி. அவர் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பிளாட்டான விக்கெட்டில் தன்னுடைய விக்கெட்டை தானாகவே தூக்கி கொடுத்துள்ளார். அது மிகவும் சோம்பேறித்தனமான ஷாட்டா இருந்தது. இந்த உலகத்தில் இப்படியொரு பந்தில் எப்படி நாம் அவுட்டானோம் என அவரே நினைத்து கொண்டிருப்பார்” என விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now