Advertisement

IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருக்கு வய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 30, 2024 • 12:11 PM
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்!
IND vs ENG, 2nd Test: இந்திய அணியில் இடம்பெறும் சர்ஃப்ராஸ், ராஜத்; உத்தேச லெவன் இதுதான்! (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 02ஆம் தேதி முதல் விசாகபட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினார். 

Trending


இதன் காரணமாக அறிமுக வீரர்கள் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், சௌரவ் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியில் குல்தீப் யாதவும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி அணியின் டாப் ஆர்டரில் ரோஹித், யஷஸ்வி, ஷுப்மன் ஆகியோரும், நான்காம் இடத்தில் ராஜத் பட்டிதார் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு சர்ஃப்ராஸ் கான் 5ஆம் இடத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பராக ஸ்ரீகர் பரத்தே செயல்படுவார் என்பதால் துருவ் ஜுரெலுக்கு இப்போட்டியில் இடம் கிடைப்பது கஷ்டம் தான். மேலும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், அஷ்வின் ஆகியோரும் அணியில் இடம்பிடிப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃப்ராஸ் கான், கேஎஸ்பாரத் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement