IND vs ENG: நாடு திரும்பிய சுப்மன் கில்!
காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய சுப்மன் கில் இன்று நாடு திரும்பினர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடர் தொடங்க இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்ததார்.
இந்நிலையில் இவர் இன்று டெல்லி திரும்பினார். இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.
இதனால் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் அல்லது மயாங்க் அகர்வால் ஆகியோரில் யாரோனும் ஒருவர் களமிறங்குவர் என எதிர்பார்க்கப் படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now