
Ind vs Eng: India play warm-up game from July 20 against County Select XI in Durham (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக கவுண்டி அணிகளுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ அனுமதி கோரியது. பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கியது.
அதன்படி ஜூலை 20ஆம் தேதி கவுண்டி லெவன் அணி இந்திய அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் டர்ஹாமில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.