சதத்தை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா; தவறிழைத்தாரா நடுவார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியிக் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களையும், கேஎல் ராகுல் 86 ரன்களில் என ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பௌ தவறவிட்டாலும், இந்திய அணி இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது.
Trending
அதன்பின் இன்று தொடங்கி மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜடேஜா 81 ரன்னுடனும், அக்ஸர் பட்டேல் 35 ரன்னுடனும் தொடந்தனர். இதில் நிச்சயம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர் ஜடேஜா 87 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா, ஜோ ரூட் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் தீர்ப்பை எதித்து ரவீந்திர ஜடேஜா மூன்றாம் நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். அப்பது மூன்றாம் நடுவரின் சோதனையில் பந்து அவரது பேட் மற்றும் கால் பேடில் ஒரே நேரத்தில் பட்டது போல் தோன்றியது.
ஆனால் மூன்றாம் நடுவர் பந்து முதலில் கால் பேடில் பட்டதாக கருதி ரவீந்திர ஜடேஜா அவுட் என அறிவித்தார். இதனால் 13 ரன்களில் அவர் தனது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now