
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான 3 நாள் பயிற்சி ஆட்டம் டர்ஹமில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. இதுதவிர தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஏற்கெனவே காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் இவர்களுக்கு மாற்று வீரர்களாக இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயந்த் யாதவும் மாற்று வீரராக இங்கிலாந்து புறப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவர் தற்போது புறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் "பிரித்வி ஷா, சூர்யாகுமார் யாதவ் இலங்கையிலிருந்து இங்கிலாந்து புறப்படுகின்றனர். ஜெயந்த் யாதவும் இங்கிலாந்துக்குப் பயணிக்க வேண்டியது. ஆனால், தனிமைப்படுத்துதல் காரணமாக திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.