
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜவரிம் 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறும் இப்போட்டியின் மீதான் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த பெரும்பாலான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் தென் ஆப்பிரிக்க தொடரில் இடம்பெற்று, அதன்பின் சொந்த காரணங்களுக்காக விலகிய இஷான் கிஷானுக்கு இந்த அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அறிமுக வீரர் துரூவ் ஜுரெல் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். அதேபோல் கேஎல் ராகுல், கேஎஸ் பரத் ஆகியோரும் இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக தேர்வாகியுள்ளனர்.