
Ind vs NZ, 1st Test: Bharat to keep wickets after Saha suffers stiff neck (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவுக்கு முன்னதாக 234 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்நிலையில் போட்டியின் கடைசி நாளான இன்று நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.