Advertisement

சஹாவுக்கு காயம்; களத்தில் பரத்- பிசிசிஐ விளக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா காயம் காரணமாக விளையாடவில்லை.

Advertisement
Ind vs NZ, 1st Test: KS Bharat keeps wickets as BCCI monitors Saha's progress
Ind vs NZ, 1st Test: KS Bharat keeps wickets as BCCI monitors Saha's progress (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 27, 2021 • 02:02 PM

கான்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தொடங்கியபோது, இஷாந்த் சர்மா முதல் பந்தை வீச தயாராக இருந்தார். அப்போது, இந்திய அணியின் வீக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் நின்று கொண்டிருந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 27, 2021 • 02:02 PM

பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ, "சாஹாவால் தனது கழத்தை அசைக்க முடியவில்லை. எனவே, அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் கீப்பங் செய்வார்" என டவிட்டரில் குறிப்பிட்டது.

Trending

மேலும், சாஹாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவருக்கு எந்தளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. 

இந்தியாவிற்காக வழக்கமாக விக்கெட் கீப்பங் செய்து வரும் ரிஷப் பந்த்க்கு, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாய்ப்பு சாஹாவுக்கு கிடைத்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாஹா, உலக கிரிக்கெட்டில் தற்போது சிறந்த வீக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். 

ஆனால், பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர், முதல் இன்னிங்ஸ் 1 ரன்னை மட்டுமே எடுத்து தனது  விக்கெட்டை பறி கொடுத்தார். இதற்கு மத்தியில், சப்ஸ்டிடியூட் விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ள பரத், உள்ளூர் போட்டிகளிலும் இந்திய 'ஏ' அணிக்காகவும் சிறப்பாக ஆடிவருகிறார்.

26 வயதான பரத், உள்ளூர் போட்டிகளில் 37.24 ரன்களை சராசரியை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, 9 சதத்தை அடித்துள்ளார். முதல் தர போட்டிகளில், 300 ரன்களை எடுத்த ஒரே வீக்கெட் கீப்பர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement