
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியிலும் வெற்றிபெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி முதலில் பேட்டிங் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தலா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்க் சாப்மேன் 14 ரன்களுக்கும், க்ளென் ஃபிலிப்ஸ் 5 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.