
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களும் குவித்தனர். பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது மட்டுமின்றி நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்தது. இந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.