
IND vs NZ: Anil Kumble, Parthiv Patel Name Future Superstars Of Indian Cricket (Image Source: Google)
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் அர்ஷ்தீப் சிங். 25 ஆட்டங்களில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இஷான் கிஷன், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டைச் சதமெடுத்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இருவரும் பெரிதளவில் சோபிக்காதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருடைய வளர்ச்சியைப் பார்த்து உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தத் தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங்கை அடுத்த சூப்பர் ஸ்டாராகக் கருதுகிறேன்.