
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டனில் நடைபெறுகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நியூசிலாந்து தொடருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஹர்திக் பாண்டியா அற்புதமான ஒரு தலைவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய முதலாவது ஆண்டிலேயே கோப்பையை வென்று சாதித்ததற்காக மட்டும் இதை கூறவில்லை. அயர்லாந்து தொடரில் இருந்து அவரிடம் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன். அவரது யுக்திகள் சிறப்பாக உள்ளன.