
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.
இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் இரண்டு விக்கட்டுகளை எடுத்து வாஷிங்டன் சுந்தர் செக் வைத்தார். ஆனாலும் கான்வோ மற்றும் டேரில் மிட்சல் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தது.