
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் புவிக்கு எதிராக நிதானமாக விளையாடியதால், அர்ஷ்தீப் சிங்கை அடித்து ஆட முயற்சி செய்தனர். அப்போது அர்ஷ்தீப் அபாரமாக புவுன்ஸ், ஸ்விங் பந்துகளை வீசியதால் பாபர் அசாம் 0, முகமது ரிஸ்வான் 4 இருவருமே இவரிடம் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி 4 ஓவர்களில் 15/2 எனத் திணறியது. இதனைத் தொடர்ந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் ஆகியவை குறைந்ததால், அடுத்து வந்த ஷான் மசூத், இப்டிகார் அகமது இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் அடிக்கடி பவுன்சர்களை பயன்படுத்தி அசத்தினார்கள். இதனால், 10 ஓவர்கள் முடிவில் 60/2 ரன்கள் மட்டுமே சென்றது.