
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து சிராஜ் உடன் களத்தில் இருந்தார்.
இதன்பின் இன்று அதிகாலையும் கனமழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதன்பின் மீண்டும் கேஎல் ராகுல் – சிராஜ் கூட்டணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிராஜ் சிறிது நேரம் கேஎல் ராகுலுக்கு கம்பெனி கொடுக்க, மறுமுனையில் கேஎல் ராகுல் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.
இதனால் கேஎல் ராகுல் சதம் விளாசுவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து கேஎல் ராகுல் 89 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரபாடா பந்தில் சிக்சர் அடித்து 95 ரன்களை எட்டினார். இந்த நிலையில் கோட்ஸி பந்துவீச்சில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிராஜ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.