-mdl.jpg)
தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பதனால் இந்த முறையாவது டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர்.
ஆனால் செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியானது இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் காரணமாக இந்திய அணி தற்போதைய நிலையில் 1-0 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
மேலும் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலோ அல்லது டிரா செய்தாலோ மீண்டும் தென்னாப்பிரிக்க அணியிடம் தொடரை இழக்க நேரிடும். அதே வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை சமன் செய்யவாவது வாய்ப்பு கிடைக்கும்.