குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவித்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
அதன்படி நேற்ற நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 100 ரன்களையும், ஜெய்ஸ்வால் 60 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Trending
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது 13.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது அதிரடியாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், “தற்போது நான் நல்ல நிலையில் உள்ளேன். என்னால் நடக்க முடிகிறது. இப்பொழுது என் கால் நலமாக இருப்பதாக உணருகிறேன்.
இந்த சதம் நாங்கள் வெற்றி பெறும்போது வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதுமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்களை குவித்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இன்று குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது.
ஏனெனில் எப்பொழுதுமே அவர் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். இன்றைய பிறந்தநாள் அன்று அவர் அவருக்கே சிறந்த பரிசினை கொடுத்துக் கொண்டார். இனிவரும் தொடர்களிலும் இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி காண்போம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now