
IND vs SL: 50% Crowd To Be Present At Mohali During Virat Kohli's 100th Test (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மொஹாலியில் கரோனா எண்ணிக்கை தினசரி பாதிப்பு 20, 30 என்ற வகையில் உள்ளது.
இதன் காரணமாக மொஹாலி டெஸ்ட் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் இந்த செயல் விராட் கோலிக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டிய ரசிகர்கள், பிசிசிஐக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், 100ஆவது டெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான தருணம். இதற்கு ரசிகர்களை அனுமதித்து, அதனை பெரிதளவில் கொண்டாட வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், இலங்கை தொடருக்கு போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை.