
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கும் நிலையில், முதல் டி20 போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது. டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் ஆடவில்லை. எனவே ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் டி20 தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான ஆடும் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷன் ஓபனிங்கில் இறங்குவது உறுதி. ருதுராஜ் - கில் ஆகிய இருவரில் யார் அவரது ஓபனிங் பார்ட்னர் என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் ஷுப்மன் கில்லை தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
3ஆம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ஆம் வரிசையில் சஞ்சு சாம்சன், 5ஆம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா, 6ஆம் வரிசையில் தீபக் ஹூடா ஆகியோரை சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.