
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வாசிம் ஜாஃபர், “இலங்கை கேப்டன் ஷனாகாவை எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். ஏனென்றால் நீண்ட காலமாகவே ஒரு தலைவலியாகவே ஷனாகா இருந்து வருகிறார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. இந்தியா வெற்றி பெற்றாலும் ஷனாகா அதிரடி சதத்தை அடித்திருக்கிறார். ஷனாகாவை எதிர்கொள்ள இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.