
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது.
இந்திய அணியில் கே.எல்.ராகுல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால் ருதுராஜ்கெய்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத்தொடரிலும் விராட் கோலி நெருக்கடியுடனே களமிறங்குகிறார். ஒருநாள் போட்டித் தொடரில் அவர், முறையே 8, 18 மற்றும் 0 ரன்களே எடுத்தார். இதனால் டி 20 தொடரில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விராட் கோலி உள்ளார்.