IND vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடர்ன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்து அணிக்கு உதவினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 ரன்களைச் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி 17 ரன்களிலும், ரிஷப் பந்த் 8 ரன்களில் ஆட்டமிழந்து வேளியேறினர். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
இதன்மூலம் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now