
IND vs WI 2nd ODI: Team India Aim To Seal The Series After A Confident Start (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி போட்டியை வென்றால் தொடரை வென்றுவிடும்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடியில் நாளைய போட்டியில் களமிறங்குகிறது. மேலும் 2ஆவது ஒருநாள் போட்டிக்கு கே.எல்.ராகுல் திரும்பியதால், அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இளம் வீரர் இஷான் கிஷன் வழி விட நேரிடும். இந்திய அணியின் பந்துவீச்சு முதல் ஆட்டத்தில் டாப் கிளாசாக இருந்தது. முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே ஜொலித்தார். 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானது.