இஷானுக்கு ஓய்வளித்து ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணியால், டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இலகுவாக சமாளிக்க முடியவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் இரண்டு டி.20 போட்டியில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. முதல் இரண்டு போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
Trending
இரு அணிகள் இடையேயான டி20 தொடரை தீர்மானிக்க போகும் 3ஆவது டி20 போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால், முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், விண்டீஸ் இடையேயான நடப்பு டி20 தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாஃபர், மூன்றாவது டி.20 போட்டிக்கான ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், “இஷான் கிஷன் டி20 போட்டிகளில் தடுமாறி வருகிறார். எனவே அவருக்கு இந்திய அணி சிறிய ஓய்வு கொடுப்பது நல்லது. சிறு ஓய்வு கொடுத்தால் நிச்சயமாக இஷான் கிஷன் முழு பலத்துடன் மீண்டு வருவார் என நம்புகிறேன். எனவே மூன்றாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக யசஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும்.
ஜெய்ஸ்வால் நல்ல பார்மில் உள்ளார், நிச்சயமாக அவர் தனது பயம் இல்லாத பேட்டிங்கின் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்ப்பார். ஜெய்ஸ்வால் சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சு என இரண்டையும் இலகுவாக எதிர்கொள்ள கூடியவர். அவரும் தனது வாய்ப்பிற்காக தான் காத்துள்ளார். திலக் வர்மாவிற்கு வாய்ப்பு கொடுத்ததன் மூலமே அவர் யார் என்பது அனைவருக்கும் தற்போது தெரியவந்துள்ளது. ஜெய்ஸ்வால் விசயத்திலும் இந்திய அணி இதை ஏன் செய்து பார்க்க கூடாது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now