‘பொல்லார்டை காணவில்லை’ - மீம் போட்டு கலாய்த்த டுவைன் பிராவோ!
வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்டை முன்னாள் வீரர் பிராவோ மீம் மூலமாக கிண்டல் செய்துள்ளார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் இத்தொடரை 3 - 0 என்ற நிலையில் இந்தியாவிடம் இழந்தது.
இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட், முதல் ஒருநாள் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் விளையாடவில்லை. முதல் ஒருநாள் போட்டியிலும் முதல் பந்திலேயே யஸ்வேந்திர சஹால் பந்துவீச்சில் டக் அவுட்டாகினார்.
Trending
இதனிடையே சஹால் பந்துவீச்சில் பொல்லார்ட் ஆட்டமிழந்ததை கலாய்க்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பொல்லார்ட்டின் புகைப்படத்தோடு, "காணவில்லை.. வயது 34, கடைசியாகப் பார்த்தது: சாஹலின் பாக்கெட்டில், அவரை கண்டுபிடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஷேர் செய்த பிராவோ, "உண்மையில் இது ஒரு சோகமான நாள். எனது சிறந்த நண்பரைக் காணவில்லை. உங்களுக்கு அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தயவு செய்து எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள் அல்லது போலீஸில் புகார் அளியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பிராவோவின் இந்தப் பதிவிற்கு பொல்லார்ட் உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் பலர் அதில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். பொல்லார்ட் இந்தப் பதிவுக்கு சிரிப்பு எமோஜிகளை இட்டதுடன், "இவர்களையும் நேசிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இவர்களின் உரையாடல் தற்போது வைரலாகி உள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now