
IND vs WI: KL Rahul And Axar Patel Out Of T20 Series; Gaikwad & Hooda Named As Replacements (Image Source: Google)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இதையடுத்து டி20 தொடர் நடக்கவுள்ளது. ஐபிஎல் ஏலம் நாளையும் (பிப்ரவரி 12) நாளை மறுநாளும் நடக்கவுள்ளதால், டி20 போட்டிகள் வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.
வரும் 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் விலகியுள்ளனர்.
கேஎல் ராகுல் 2ஆவது ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்ததால், 3ஆவது ஒருநாள் போட்டியிலும் அவர் ஆடவில்லை. இந்நிலையில், டி20 தொடருக்கான அணியிலிருந்து விலகியுள்ளார். அதேபோல கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அக்ஸர் படேலும் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.