
Ind vs WI: Kohli to miss third T20I as he leaves bio-bubble (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றது.
டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. 2ஆவது டி20 ஆட்டத்தில் விராட் கோலி 52 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மீதமுள்ள ஒரு டி20 ஆட்டத்திலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதற்காக கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு இன்று காலை அவர் வெளியேறியுள்ளார்.